அரசு வழங்கும் கார் வேண்டாம்!
ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 59 திமுக எம்எல்ஏக்களும் கார்களைப் பெறமாட்டார்கள்.
தமிழக அரசு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் புதிய கார் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 59 திமுக எம்எல்ஏக்களும் அந்தக் கார்களைப் பெறமாட்டார்கள் என உதயநிதி அறிவித்தார். அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்எல்ஏக்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.