லார் கிப்பன் குரங்கு விவகாரம்
உரிமையாளர் மீது வனத்துறை வழக்கு; விக்ரம் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விக்ரம் அரிய வகை லார் கிப்பன் குரங்குடன் விளையாடிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து வனத்துறை விசாரணை நடத்தியது. இந்தக் குரங்கு, சென்னை ECR உள்ள கெவின்கேர் தலைவர் சி.கே. ரங்கநாதனின் இல்லத்தில் பராமரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குரங்கை வைத்திருத்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பான ஆவணங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், அதன் உரிமையாளர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. விக்ரம் வனத்துறையிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.
ஆதாரம்
- தமிழ்நாடு வனத்துறை