தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பெரியமேட்டில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பெரியமேட்டில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தற்போதைய ₹19,000 சம்பளத்தை குறைந்தபட்சம் ₹25,000-ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை. ஆட்சியர் அறிவித்த ₹832 தினக்கூலிகூட வழங்கப்படவில்லை என உழைப்போர் உரிமை இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது. கைது செய்யப்பட்ட நிலையிலும், முதல்வரைச் சந்தித்துத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.