மாணவர்களுக்கு 31 அறிவிப்புகள்!
பள்ளிக் கல்வித் துறைக்கு 31 அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
பள்ளிக் கல்வித் துறைக்கு 31 அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். 6-12 வகுப்புகளுக்கு ரூ.18.01 கோடியில் கருத்தியல், பகுப்பாய்வு, சிக்கல் தீர்க்கும் ‘மதிச்சுடர்’ திட்டம். மாணவர்களுக்கு விளையாட்டு உடை; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல், கண், காது மருத்துவப் பரிசோதனைகள். 2027-28 முதல் 1-12 வகுப்புகளுக்கு ‘தமிழ்நாடு அறிவு’ பாடத்திட்டம்; AI, Robotics, VR இணைந்த TN Spark. 37,417 பள்ளிகளுக்கு ரூ.187.29 கோடி ஒருங்கிணைந்த மானியம்; 1,799 அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.21.84 கோடி. ஸ்மார்ட் நூலக அட்டை, ரூ.3 கோடி AI உயர்கல்வி வழிகாட்டி செயலி, ரூ.27.43 கோடி ‘துணை’ மனநலத் திட்டமும் அடங்கும்.
ஆதாரம்
- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு