பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லையா? ஆசிரியர்கள் கொந்தளிப்பு!
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நிதியமைச்சர் அறிவிப்புக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை அரசு புறக்கணிப்பதாகவும், புதிய ஓய்வூதியத் திட்டம் பழைய திட்டத்துக்கு முழுமையான மாற்றாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.