மின்துறை தனியார்மயத்தை நோக்கி நகர்கிறதா?
TVK ஆட்சியின் தொடக்க மாதங்களிலேயே அடிக்கடி மின்வெட்டு புகார்கள் எழுந்தன.
TVK ஆட்சியின் தொடக்க மாதங்களிலேயே அடிக்கடி மின்வெட்டு புகார்கள் எழுந்தன. மின்துறையைப் படிப்படியாகத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன்னோட்டமா என்ற சந்தேகமும் அப்போதே கிளம்பியது. பட்ஜெட்டில் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் ₹8,000 கோடி, கோவை–அரியலூர் 765 KV மின்பாதை ₹4,000 கோடி என PPP திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 20,000 EV சார்ஜிங் நிலையங்களும் PPP முறையில்; மின்துறையில் மட்டும் குறைந்தது ₹12,000 கோடி தனியார் பங்களிப்புத் திட்டங்கள். அன்று எழுந்த சந்தேகம் இன்று உண்மையாகிறதா?
ஆதாரம்
- தமிழ்நாடு பட்ஜெட் 2026–27