இடைத்தேர்தல் தடையை நீக்க வேண்டும்!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என முதல்வர் விஜய் பதில்மனுவில் கோரியுள்ளார்.
திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என முதல்வர் விஜய் பதில்மனுவில் கோரியுள்ளார். மே 10-ம் தேதியே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாகவும், ஜூன் 17-ம் தேதிதான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்தவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரல்ல; தொகுதி வாக்காளருமல்ல என விஜய் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது. தொகுதி மக்கள் எம்எல்ஏ இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்; தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும்; வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.