முல்லைப் பெரியாறு அணையில் ‘Drone Reels’ - தவெக எம்எல்ஏ மீது கேரள வனத்துறை புகார்
பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ட்ரோன் காட்சிகளை எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ட்ரோன் காட்சிகளை எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அணை அமைந்துள்ள பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் ட்ரோன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆக.8 தண்ணீர் திறப்பு நிகழ்வின்போது ட்ரோன் காட்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது; அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்தியதாக கேரள வனத்துறை புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்.
ஆதாரம்
- The Hindu